அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், துப்பாக்கிச்சுடும் சத்தம்கேட்டு பால்டிமோர் காவல்துறையை உஷார்படுத்தினர்.
இதையடுத்து போலீஸ் வாகனங்கள் மோர்கன் பல்கலைக்கழக பகுதியில் குவிந்தன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை என தெரிவித்துள்ள போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.