ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
தாக்குதல் டிரோன்கள், கண்காணிப்பு டிரோன்கள் என உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்ட 200 டிரோன்களை பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
நிலம், கடல் மற்றும் வான் எல்லைகளை கண்காணிக்கவும், அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் டிரோன்களை பயன்படுத்தப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.