ஆசியாவில் டெங்கு பாதித்த நாடுகளில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்கு பாதித்து ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பருவமழை காலமான ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் வங்கதேசத்தில் டெங்கு பரவல் மிக மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கொசு மூலம் டெங்கு மட்டும் அல்லாமல் சிக்கன்குன்யா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.