அஜர்பைஜானுக்கு உட்பட்ட நகோர்னா கராபாக்கில், கடந்த 30 ஆண்டுகளாக தனி நாடு கோரி அர்மேனிய இன மக்கள் போராடி வந்த நிலையில், அஜர்பைஜான் அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் அஜர்பைஜான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி நகோர்னா கராபாக்-ஐ கைப்பற்றியது. அங்கு வசித்து வந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் அர்மேனிய இன மக்களில் இதுவரை 90 ஆயிரம் பேர் அண்டை நாடான அர்மேனியாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
அர்மேனிய இன மக்களின் தலைவரான சாமுவேல் ஷாரமன்யன் நகோர்னா கராபாக்கில் பிரிவினைவாதிகள் நிர்வாகித்து வந்த அரசு அமைப்புகளை கலைத்துவிடும்