பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில், மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 52 பேர் உயிரிழந்தனர்.
மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் காலை தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்தபோது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் அம்மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரி உள்பட 52 பேர் உயிரிழந்தனர்.
எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தானில் இயங்கிவரும் தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.