காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காலிஸ்தான் தலைவர்கள் படகுகள், திரைப்படங்கள் உள்ளிட்ட தொழில்களில் பெரும் முதலீடுகளை செய்திருப்பது தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவில் விலை உயர்ந்த சொகுசுப் படகுகளை வாங்க பெரும் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. கனடாவை அடைக்கலம் கொண்டு காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்கள் மிகப்பெரிய அளவில் முதலீடுகளை செய்து வருவதாக என்.ஐ.ஏ நேற்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் , சட்டவிரோத மது கடத்தல், போன்றவை மூலம் இந்தப் பணம் ஈட்டப்பட்டது என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,