கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதன் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் இந்திய அரசு உயர் அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜாலி விடுத்த அறிக்கையில், கனடா மண்ணில் கனடா குடியுரிமைப் பெற்றவரைக் கொலை செய்ததை ஏற்க முடியாது என்றும் கனடாவின் இறையாண்மை விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.