ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு பின்னர் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் அதிபர் ஜெல்ன்ஸ்கி உரையாற்ற உள்ளார்.
நேற்று நியூயார்க்கில் தரையிறங்கிய பின்னர் விமான நிலையத்திலிருந்து நேராக ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஜெலென்ஸ்கி புறப்பட்டு சென்றார்.
அங்கு உக்ரேனிய வீரர்கள் சிகிச்சை பெற்று வருவதை விசாரித்தார். பின்னர் வாஷிங்டன் செல்லும் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.