ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த 24 வயது இளைஞர், 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தினார்.
தகவல் அறிந்து விரைந்த போலீசார் இளைஞரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவர் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த போலீசார் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.