லிபியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டெர்னா நகரில் ரஷ்ய நாட்டு குழுக்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வசித்துவந்த டெர்னா நகரை கடந்த பத்தாம் தேதி தாக்கிய டேனியல் சூறாவளியால் 2 அணைகள் உடைந்து நகரின் பெரும்பகுதி கடலுக்கு அடித்து செல்லப்பட்டது.
20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும் என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.