அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் மீது 5 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாகவும் கடுமையான போதைப் பொருள் மயக்கத்தில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
இந்தக் குற்றங்களுக்காக அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதித்துறை சிறப்பு வழக்கறிஞர் டேவிட் வெய்ஸ் உடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹன்ட்டர் சமாதான முயற்சி மேற்கொண்டாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
வரி ஏய்ப்பு குற்றத்தை ஏற்று அபராதம் செலுத்தி போதைப் பொருளில் இருந்து விடுபட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற ஒப்புக் கொண்டால் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டை திரும்பப்பெறுவதாக டேவிட் கூறியிருந்தார்.