உயர் வெடிபொருட்கள், ரசாயனம், அணு ஆயுதம் உள்ளிட்டவற்றை சுமந்து சென்று தாக்கும் வல்லமை படைத்த 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக ஜப்பானும், தென்கொரியாவும் குற்றம் சாட்டியுள்ளன.
தென்கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் சோதனை செய்யப்பட்ட 2 ஏவுகணைகளுமே, தங்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக கூறியுள்ள ஜப்பான், வடகொரியாவின் இந்த செயலை ஏற்க முடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்திப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பாக இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.