நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொரோக்கோவில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நகரங்கள் மட்டும் இன்றி கிராமங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களையும், பலியானவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
கிராமங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் சீட்டு கட்டுகள் போல் சரிந்து கிடக்கின்றன. இதனிடையே மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மாயமானவர்களை உறவினர்கள் இனம்கண்டு மீட்டு செல்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நில நடுக்கத்தால் இதுவரை 2800 பேருக்கும் மேல் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.