துபாயில், சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு மத்தியில் சிற்ப கலைஞர் ஒருவர் மைனஸ் டிகிரி செல்சியஸில் குளிரூட்டப்பட்ட ஸ்டூடியோவில் இருந்தபடி ஐஸ் சிற்பங்களை வடித்து வருகிறார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மார்க் ரணசிங்கே, விசேஷ நிகழ்ச்சிகளில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் ஐஸ் சிற்பங்களை, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவில் வைத்து வடிவமைத்து கொடுத்து வருகிறார்.
மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்ட அறையில் குளிர்கால ஆடைகள் அணிந்தபடி அவர் ஐஸ் சிற்பம் வடிப்பதை காண பலர் ஆர்வமுடன் அவரது ஸ்டூடியோவிற்கு வருகின்றனர்.