டுவிட்டர் உரிமையாளரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தமது டெஸ்லா நிறுவன நிதியை தவறாக பயன்படுத்தி ரகசிய கண்ணாடி மாளிகை கட்டி வருவதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக அமெரிக்க நீதித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரில் கட்டி வருவதாக கூறப்படும் கண்ணாடி மாளிகை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் எலான் மஸ்க் உறுதி செய்யவில்லை.
எனினும், கண்ணாடி மாளிகை கம்பெனி பெயரில் கட்டப்படுகிறதா அல்லது தனி நபர் பெயரில் கட்டப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள அமெரிக்க விசாரணை அமைப்பினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க பங்குசந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியமும் தகவல் திரட்டி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. GFX-OUT