தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கிரீஸ் சென்றடைந்தார்.
ஏதென்ஸ் விமான நிலையில் பிரதமர் மோடியை கிரீஸ் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் வரவேற்றார்.
இந்திய வம்சாவளியினரை சந்திப்பதற்காக கிராண்ட் பிரேடாக்னே ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, மூவர்ண கொடியை அசைத்தும், பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேள, தாளங்களுடன் அளிக்கப்பட்ட வரவேற்பை பிரதமர் மோடி சிறிது நேரம் நின்று ரசித்து சென்றார்.
பிரதமரை வரவேற்ற இந்திய வம்சாவளி குழந்தைகள், அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிரதமர் மோடியின் கிரீஸ் பயணம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு வாழும் புலம்பெயர் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தியா-கிரீஸ் இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என பிரதமர் மோடி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.