சந்திரயான் 3இன் வெற்றி மனிதகுலம் முழுவதற்குமான சாதனையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது பெருமையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர், இந்தியா வராற்று சாதனை நிகழ்த்தியதற்கு வாழ்த்து தெரிவித்த உலக அறிவியல் சமூகத்துக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக மாநாட்டு மேடைக்கு வந்த போது சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இந்தியா, சீனா உள்பட 5 நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகளை இணைப்பதற்கு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அர்ஜென்டினா, எத்தியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து ஆகிய 6 நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.