தென் கொரியாவில் ராணுவ வீரர்கள் தங்குவதற்காக பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள அறையை அந்நாட்டு அதிபர் யூம் சுக் யோல் பார்வையிட்டார்.
பின் அங்கிருந்தபடியே காணொலி வாயிலாக அமெரிக்க, தென் கொரிய ராணுவ அதிகாரிகளிடம் அவர் உரையாற்றினார்.
கொரிய தீபகற்பத்தில் பல ஆண்டுகளாக நீடித்துவரும் போர் பதற்றத்தால் பூமிக்கடியில் சுமார் 17 ஆயிரம் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத அளவில் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியில் தென் கொரிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் ஈடுபட்டுவருகின்றன.