தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் கொள்ளையர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் எல்லைப் பிரச்சனையில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களே இல்லை என்று கூறியுள்ள அவர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன் வளத்தை அழிப்பதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக தாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினார்.
மீனவர்கள் எல்லை தாண்டி வராமல் இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட போவதில்லை என்று கூறிய கேப்டன் கயான் விக்ரமசூரிய, மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜிபிஎஸ் லொகேஷனை இலங்கை கடற்படை வசம் ஒப்படைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.