ஜிம்பாப்வேயில் பொது தேர்தலுக்கு முன்னதாக பிரதான எதிர்க்கட்சியான,மாற்றத்திற்கான குடிமக்கள் கூட்டணி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற இந்த பேரணிக்கு எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் நெல்சன் சமிசா தலைமை தாங்கினார். இதையொட்டி அங்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
ஜிம்பாப்வேயில் தற்போதைய அதிபர் எம்மர்சன் மங்கக்வா, 2017 இல் முன்னாள் தலைவர் ராபர்ட் முகாபேவின் ஆட்சியை கவிழ்த்த பின்னர் 2018-இல் அதிபர் ஆனார். நாளை நடைபெறும் அதிபர் தேர்தலில் இளைஞர்களின் வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.