ஆசிய அளவில், வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிகப்பெரிய கண்காட்சி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவருகிறது.
57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில், வளர்ப்பி பிராணிகளுக்கான விதவிதமான உணவுகள், உடைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
கொரோனா ஊரடங்கின்போது வீடுகளில் முடங்கிய மக்கள் வளர்ப்பு பிராணிகளுக்காக அதிக பணம் செலவிடத் தொடங்கியதாகவும், அதிலும் சீனர்கள் 10 சதவீதம் பேர் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வைத்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.