அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கரையோரம் இருந்த வீடு ஆற்றில் இடிந்து விழுந்தது. மெண்டென்ஹால் ஆற்றில் இருந்த பனிப்பாறையின் பிளவுகள் வழியாகத் தண்ணீர் திடீரென வெளியேறியது.
வழக்கமாக அந்த ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பாயும் நிலையில் பனிப்பாறை வெடிப்பால் 15 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.