பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து அவருடைய பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நாடு தழுவிய போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தோஷகானா வழக்கில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இம்ரான்கானின் கட்சி தாக்கல் செய்துள்ளது.
அரசுக்குரிய பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 5 ஆண்டுகள் அரசியலை விட்டு விலகி இருக்கவும் அத்தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பலத்த பாதுகாப்புடன் இம்ரான் கான் இஸ்லாமாபாத் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.