ஜப்பானை புரட்டிபோட்டுவிட்டு தைவான் அருகே நகர்ந்து சென்ற கனூன் சூறாவளியால் 3 நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மலைப்பகுதிகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஏராளமான மக்கள் மலையை விட்டு இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைப்பகுதிகளில் உள்ள 11 நகரங்களில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.