பிரேசிலில், அமேசான் காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள், விமானங்கள் மூலம் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அங்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மழை குறைந்ததும், மக்கள் வேளாண்மைக்கு நிலங்களை விரிவுபடுத்த, காடுகளை தீவைத்து அழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் அதிபர் லூயி சில்வா எடுத்த கடுமையான நடவடிக்கைகளால், அமேசான் காடுகள் அழிக்கப்படுவது, இதுவரை இல்லாத அளவில் 43 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.