அயர்ன் மேன் திரைப்படத்தின் கதாநாயகன் ராபர்ட் டவுனி ஜூனியர், தனது குடும்பத்திற்கு சொந்தமான 6 பழைய மாடல் கார்களை குலுக்கல் முறையில் ரசிகர்களுக்கு கொடுப்பதாக கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில், 6 கார்களின் படங்களை வெளியிட்டு அதில் ஒரு காரில் அவரே உட்கார்ந்து இருப்பதை பகிர்ந்துள்ளார். 1965 மற்றும் 1985 ஆண்டுகளுக்கு இடையே வாங்கப்பட்ட செவ்ரோலேட், மெர்சிடிஸ்-பென்ஸ் என விலை உயர்ந்த கார்களை தமது அறக்கட்டளை மூலம் ரசிகர்களுக்கு கொடுக்க அவர் முன்வந்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளை சேர்ந்த 18 வயது நிரம்பிய ரசிகர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.