பாதுகாப்பு இல்லாததால் சொந்த நாட்டவர்களை ஹைதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா கூறிவரும் நிலையில், பணத்திற்காக கடத்தப்பட்ட அமெரிக்க பெண்ணையும் அவரது குழந்தையையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று ஹைதியில் ஆசிரியர்களுடன் பள்ளி குழந்தைகள் பேரணி சென்றனர்.
கரீபியன் தீவு நாடான ஹைதி உலகிலேயே அதிக அளவு குற்றங்கள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்திற்காக அமெரிக்கர்களால் நடத்தப்பட்டுவரும் தொண்டு நிறுவனத்தின் இயக்குநரின் மனைவி மற்றும் குழந்தையை மர்ம நபர்கள் பணத்திற்காக கடத்திச் சென்றனர்.
அவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.