உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷ்யா நிராகரிக்கவில்லை என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிய புதின் பின்னர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆப்பிரிக்க நாடுகளின் சமரசத் திட்டத்துக்கு பதிலளித்து பேசிய புதின், அமைதிக்கான முயற்சியில் சீனாவும் ஈடுபடக்கூடும் என்று தெரிவித்தார்.
உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தும் போது போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது கடினம் என்றும் அவர் கூறினார். உக்ரைன் முதலில் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தினார்.