அமெரிக்காவின் நியுயார்க் நகரவாசிகள் தாளாத வெயிலால் தவிக்கிறார்கள்.
வரலாறு காணாத கடும் வெப்ப நிலைகளால் நியுயார்க் நகரம் முழுவதும் வெப்ப அலை வீசுகிறது. 100 டிகிரியைத் தாண்டிய வெப்பநிலையில் உடல் சூட்டைத் தணிக்க பலர் குடும்பம் குடும்பமாக பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குளங்களில் நீராட செல்கிறார்கள்.
குழந்தைகளும் நீரில் குதித்து விளையாடி மகிழ்கின்றனர். ஐஸ்கிரீம் போன்றவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.பொதுமக்கள் வெயில் தொடர்பான பாதிப்புகளைத் தவிர்க்க வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோரும் நாள்பட்ட நோய் கொண்டவர்களும் வெயிலைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்ப்டடுள்ளனர்