ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் 16 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வனம் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
பெஜாயா மற்றும் பௌய்ரா மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பொதுமக்களில் 15 பேர் வரை பலியாகி உள்ளதாகவும் அல்ஜீரிய அரசு தெரிவித்துள்ளது.