நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளூர் பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் தொழிலதிபர்களும் எந்தவிதத் தொந்தரவு இல்லாமல் நேரடியாக இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என்றார்.
அமெரிக்க டாலர், சீனாவின் யென் போல இந்திய கரன்சியையும் இலங்கையில் பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
உணவு, மருந்துப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல்கள், உரங்கள் மற்றும் இரசாயனங்கள் உட்பட ஏராளமான பொருட்களை இலங்கை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2021 இல் 5.45 பில்லியன் டாலராக இருந்தது.