நிலம் மற்றும் கடலில் எதிரிகளின் இலக்கை துல்லியமாக கணக்கிட்டு தாக்கும் வல்லமை படைத்த குரூஸ் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.
கொரிய நேரப்படி அதிகாலை 4 மணியளவில், கொரிய தீபகற்பத்தின் மேற்கே கடலை நோக்கி இந்த ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
அணுஆயுத தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கெண்டகி நீர்மூழ்கி போர்க்கப்பல் தென்கொரியாவின் பூசன் துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவ நடவடிக்கைக்கு எதிராக வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை சோதித்துள்ளது.