சீனாவில், கடந்தாண்டு வளர்ப்பு பிராணிகள் வாங்கவும், அவற்றை பராமரிக்கவும் மக்கள் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டை விட இது 25 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலன சீனர்கள் சிறிய குடும்பத்தையே விரும்புவதால் இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு பிறப்பு விகிதாச்சரம் கடுமையாகச் சரிந்துள்ளது.
சுமார் பன்னிரெண்டரை கோடி வீடுகளில் ஒரு நபர் மட்டுமே தனியாக வசித்துவருவது அந்நாட்டரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தனிமையைப் போக்க நாய், பூனை போன்றவற்றை வளர்க்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. உணவு, மருந்து என வளர்ப்பு பிராணிகளின் பராமரிப்புக்காக மக்கள் செலவிடும் தொகையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.