நிதி நெருக்கடி மிக்க சூழலில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் கடனாக கொடுக்க சர்வதேச நாணய நிதியமான IMF ஒப்புதல் அளித்துள்ளது, அந் நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதாரத்தை சீரமைக்க இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.
சுமார் 1 புள்ளி 2 பில்லியன் டாலர்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தவணைகள் பாகிஸ்தானுக்கு பின்னர் வழங்கப்படும் என்றும் IMF நிர்வாகக் குழு தெரிவித்தது, பாகிஸ்தான் சவாலான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையே 2 பில்லியன் டாலர் மற்றும் 1 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்த பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.