கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பாகிஸ்தான் மிகப் பெரிய ராணுவ விற்பனை ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
அந்நாட்டுத் தயாரிப்பான ஜேஎஃப்-17 தண்டர் பிளாக் III ரகத்தைச் சேர்ந்த 12 போர் விமானங்களை ஈராக்கிற்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தயாரிப்பான ஏரோ என்ஜின் பொருத்தப்பட்ட, 42 சதவீத விமான பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை, மீதமுள்ள 58 சதவீத உற்பத்தி பாகிஸ்தானில் செய்யப்படுகிறது.
சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத விற்பனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎஃப் 17 ரக விமானங்களை வாங்கும் 5 வது நாடு ஈராக் என்பது குறிப்பிடத்தக்கது.