பொருளாதார நெருக்கடியில் திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான் அரசு, கராச்சி துறைமுகத்தின் ஒரு பகுதியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
பணப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறிவரும் பாகிஸ்தான் அரசு, அந்நாட்டின் பழமையான கராச்சி துறைமுகத்தின் ஒரு பகுதியை 50 ஆண்டுகளுக்கு சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
33 கப்பல்களை நிறுத்தும் வசதி கொண்ட கராச்சி துறைமுகத்தில் 4 கப்பல்கள் நிறுத்தும் இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஐக்கிய அரபு ஆமீரகம், பெரிய கப்பல்கள் நிறுத்த வசதியாக துறைமுகத்தை ஆழப்படுத்த திட்டமிட்டுள்ளது.