அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் மிஷன் இம்பாசிபிள் ஏழாம் பாகம் திரைப்படத்தின் சிறப்பு காட்சி ரோம் நகரில் திரையிடப்பட்டது.
அதையொட்டி அந்நகரின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்பானிஷ் படிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், படத்தின் நாயகன் டாம் குரூஸ் உள்பட முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
திரைப்படத்தில் ஒரு கார் சேஸிங் சீன் இங்கு படமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பழைய மாடல் ஃபியட் காரும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்காக 60 வயதிலும் டாம் குரூஸ் செய்த ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.