மெக்சிக்கோவில் வெப்ப அலை 45 டிகிரி செல்சியசை கடந்து இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் நீர்நிலைகளை தேடி ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
15 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெக்சிகோ நகரில் வசிப்பவர்கள் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். சிலர் நீர் நிலைகளுக்கு சென்று வெப்பம் தணிக்கின்றனர்.