அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாகாணத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பல இடங்களில் இந்த மழை காரணமாக தங்களின் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் வாகனங்கள், மரங்கள் ஆகியவற்றிற்கும் சேதம் ஏற்பட்டது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
இதற்கிடையில் ஆலங்கட்டி மழை பெய்யும் வீடியோவை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.