அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் புகுந்த சுமார் 10 அடி நீள முதலை வனத்துறையினரால் பிடித்து செல்லப்பட்டது.
புளோரிடாவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரிடம் இருந்து, தங்களது வீட்டு பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில் முதலை ஒன்று கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு போன்ற சாதனத்தை முதலை மீது வீசி சுற்றி வளைத்து வன அலுவலர்கள் வெளியே இழுத்தனர். அப்போது அவர்களது பிடியில் இருந்து தப்பிக்க முதலை தனது உடலை சுற்றிச்சுற்றி சுழன்றடித்தது.