டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், டெஸ்லா அதிபர் மஸ்க்கும், பிரான்ஸ் தொழிலதிபர் லூயிஸ் வுட்டன் பெர்னார்ட் அர்னார்ட்டும் மாறி மாறி, முதலிடத்தை வகித்து வருகின்றனர்.
தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் மஸ்க் முதலிடத்துக்கு முன்னேறி இருப்பதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே முதலிடத்தில் இருந்த லூயிஸ் வுட்டன் பெர்னார்ட் அர்னார்ட் 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் 2வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டு இருப்பதாகவும் புளும்பெர்க் குறிப்பிட்டுள்ளது.