அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31 புள்ளி 4 டிரில்லியன் டாலர்கள் வரை நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜோபைடன், கடன் வரம்பை உயர்த்த நாடாளுமன்றம் தவறும் பட்சத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதுடன் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.