மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து செல்வோர் ஆபத்தான முறையில் ரயில் பயணம் செல்கின்றனர்.
குடியேற்றக் கொள்கையை கடுமையாக அமல்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் வேளையில், அந்நாட்டு எல்லைக்குள் நுழைய ஆபத்தான போராட்டத்தை குடியேறிகள் நடத்தி வருகின்றனர்.
மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியில் உள்ள ஹூஹூடோகா என்ற நகரத்தில் இருந்து குப்பைக் கிடங்கில் காத்திருக்கும் குடியேறிகள் சரக்கு ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கின்றனர்.
அமெரிக்க எல்லைப் பகுதியை அடைந்ததும் உயிரைப் பணயம் வைத்து குதித்து விடுவதாக அமெரிக்க குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இடம்பெயர்வு அதிகரித்துள்ளதால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.