மத்திய தரைக்கடல் பகுதியில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரேஷியாவின் ஜாதர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடல் பகுதியில் ஆராய்ச்சி செய்தனர். அப்போது, கோர்குலா தீவின் கரையோரப் பகுதியில் கற்களால் ஆன சாலையைக் கண்டுபிடித்தனர்.
நீர்பரப்புக்கு 15 அடி ஆழத்தில் அமைந்திருந்த அந்தச் சாலையை ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்த போது, அந்தச் சாலை ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 900 ஆண்டுகள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது.