ஆப்பிரிக்க நாடான காங்கோவில் திடீரென பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள கலேஹே பிரதேசத்தில் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஆற்றின் வெள்ளத்தில் புஷுஷு மற்றும் நியாமுகுபி கிராமங்கள் முழுமையாக மூழ்கின. இந்த கிராமங்களில் இருந்து மட்டும் சுமார் 227 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்களை காப்பாற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.