உலகளவில் கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழு கூட்டத்திற்கு பின், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், கொரோனா பாதிப்புகளிலிருந்து உலகம் முற்றிலும் விடுபட வில்லை என்றும், உலகளவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த வாரம் கூட மூன்று நிமிடங்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறினார்.
வைரஸின் இறப்பு விகிதம் ஜனவரி 2021-இல் வாரத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகம் என்ற உச்சத்தில் இருந்து ஏப்ரல் 24 அன்று 3 ஆயிரத்து 500 க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வால் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.