மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து குன்றில் இருந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.
நயாரிட்டில், டெபிக் மற்றும் சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவை இணைக்கும் நெடுஞ்சாலையில் இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது 15 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 11 பெண்கள், 7 ஆண்கள் என 18 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 11 சிறுவர்கள் உள்பட 33 மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.