துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் அபு ஹூசேனை கண்காணித்து வந்ததாகக் கூறினார்.
நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அவர் உறுதி செய்தார். தீவிரவாத இயக்கங்கள் மீது தொடர்ந்து பாரபட்சமற்ற யுத்தம் தொடரும் என்றும் ஏரோடகன் உறுதிபடத் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தாக்குதலால் துருக்கியில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர்.