ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு நாளை இந்தியா வருகிறார்.
இதுதொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஜெனரல் லி பங்கேற்று உரையாற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்-கையும் லி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது.
கடந்த 2020ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவம் இடையே எல்லைப் பிரச்சனை நீடிக்கும் நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜெனரல் லியின், இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.