உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இருந்து மீட்கப்பட்ட கென்யா, சவுதி அரேபியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்பினர்.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால், அந்நாட்டில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் பல நாடுகள் களமிறங்கியுள்ளன.
அந்த வகையில் சவுதி அரேபியா, கென்யா, தென்கொரியா போன்ற நாடுகள் கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் தங்களது நாட்டினரோடு சேர்த்து, பிற நாட்டினரையும் பத்திரமாக மீட்டு, அழைத்து வந்துள்ளன.